Porin Marupakkam (போரின் மறுபக்கம்)

By Tho. Paththinathan (தொ. பத்தினாதன்)

Porin Marupakkam (போரின் மறுபக்கம்)

By Tho. Paththinathan (தொ. பத்தினாதன்)

336.00

MRP ₹352.8 5% off
Shipping calculated at checkout.

Specifications

Print Length

224 pages

Language

Tamil

Publisher

Kalachuvadu Publications

Publication date

1 January 2007

ISBN

9788189945183

Weight

180 gram

Description

போரில் மடிவதைக் காட்டிலும் கொடிது அதுதரும் துயரத்தோடு வாழ்வது! தமிழகத்தில் வாழ நேர்ந்திருக்கும் ஈழத் தமிழ் அகதிகளின் நிலையும் இதுதான். தன் சிறுவயதில் அகதியாய் வந்திறங்கி நடுத்தர வயதைக் கடந்திருக்கும் ஈழத்தமிழர் ஒருவருடைய தமிழக வாழ்வின் நேரடி அனுபவம்தான் இந்தத் தன்வரலாறு. ஒருபுறம் பாராமையாகவும் மறுபுறம் பெரும் உணர்ச்சிப்பூர்வமாகவும் அணுகப்பட்டுவரும் இன்றைய ஈழத் தமிழர் பிரச்சனையின் வாழ்வனுபவத்தை மொழியின் சாகசமாகவோ கழிவிரக்கமாகவோ மாற்றி கவனம் கோராமல் வாழ்வின் இருத்தலுக்கும் அறம்சார்ந்த கேள்விகளுக்குமிடையே இருந்து எழுதிச் செல்கிறார் தொ. பத்தினாதன்.
அரசியல் இயந்திரங்களாலும் அரசியல் கட்சிகளாலும் சமூகத்தின் பொதுப் புத்தியாலும் அலைக்கழிக்கப்பட்டு ‘இன்றைய வாழ்விற்கு’ப் பழக்கப்பட்டுப் போன அகதிகளை நம்முடைய தமிழ்ச் சமூகம் எவ்வாறு வைத்திருக்கிறது என்பதற்கான கால் நூற்றாண்டு சாட்சியம் இந்நூல். மெல்லிய சுயவிமர்சனத்தோடு நகரும் இந்த நூல் எதிர்காலத்தில் எழுதப்படப்போகும் அகதிகள் சார்ந்த பதிவுகளுக்கான வலிமையான தொடக்கம். வெளிவந்த போது பரவலான கவனத்தைப் பெற்ற தன்வரலாற்றின் செம்மைப்படுத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு.


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%