₹1170.00
MRPGenre
Print Length
888 pages
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2006
ISBN
9788190464741
Weight
220 gram
சுந்தர ராமசாமியின் படைப்பு ஆளுமையின் முக்கியமான பல கூறுகளை அவரது சிறுகதைகளிலேயே தெளிவாக அடையாளம் காணமுடிகிறது. பல வழிகளில் பயணம் செய்துவந்த சுந்தர ராமசாமியின் இலக்கிய வெளிப்பாடுகள் சிறுகதைகளின் வாயிலாகவே தொடங்கியது மட்டுமல்ல; சிறுகதைகளின் வழியாகவே கூர்மையாகத் தம்மை நிலை நிறுத்திக் கொண்டன. தமிழ் நாவல் வரலாற்றிலேயே அதிக விவாதங்களை உருவாக்கியுள்ள ‘ஜே.ஜே.: சில குறிப்புகள்’ நாவலை எழுதியிருந்தாலும் சிறுகதைகளை மட்டுமே வைத்து அவரைத் தமிழின் முக்கியப் படைப்பாளிகளில் ஒருவராகக் கூறிவிட முடியும்.
சு.ரா.வின் சிறுகதைகள் வாசிப்பை ஓர் இனிய அனுபவமாக்கும் அதே நேரத்தில் தீவிரமான அனுபவத்தின் தொந்தரவுக்கும் நம்மை உள்ளாக்குகின்றன. செறிவும் நேர்த்தியும் கொண்ட மொழியோடு உறவுகொள்ளும் சுகத்தை அளிக்கும்போதே உக்கிரமான தேடலின் கனத்தையும் நம் மீது சரியச் செய்துவிடுகின்றன. மனித துக்கத்தையும் அவலங்களையும் மட்டுமன்றி நெகிழ்வையும் விகாசத்தையும் பதிவுசெய்கின்றன.
வாழ்வுக்கும் நமக்கும், காலத்திற்கும் நமக்கும், மொழிக்கும் நமக்கும் இடையேயான உறவுகளைச் செழுமைப்படுத்துவது ஒரு கலைஞனின் முக்கியமான பங்களிப்பாக இருக்க முடியும். சுந்தர ராமசாமியின் சிறுகதைகள் இதைப் பெருமளவில் நிறைவாகச் செய்திருக்கின்றன.
பின்னுரையில் அரவிந்தன்
0
out of 5