₹300.00
MRPGenre
Print Length
200 pages
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2025
ISBN
9788119034871
Weight
180 gram
உலகெங்கும் உருவாகியுள்ள புலம்பெயர் எழுத்துகளில் தாயக ஏக்கமும் தாய்நாட்டிற்குத் திரும்பும் தாகமும் எதிரொலிக்கின்றன.
பொ. கருணாகரமூர்த்தியின் கதைகள் இந்த ஏக்கத்தையும் தாகத்தையும் படைப்பூக்கத்தோடு பிரதிபலிக்கின்றன. ஜெர்மன் வாழ்க்கையில் தமிழரின் ஊடாட்டத்தை நுணுக்கமாகப் பதித்திருக்கும் கருணாகரமூர்த்தியின் எழுத்து தனித்துவம் கொண்டது. ஐரோப்பியப் புகலிட வாழ்வுபற்றிய விரிவான சித்தரிப்பை இவருடைய கதைகள் தருகின்றன.
இயல்பாகக் கதை சொல்லும் ஆற்றல் கொண்ட கருணாகரமூர்த்தி கதைகளை லாவகமாக வளர்த்துச்செல்கிறார். புதிய தளங்களை அறிமுகப்படுத்தும் இவருடைய கதைகள், புதிய அனுபவங்களைத் தருகின்றன. வாழ்வின் வலிகளும் போதையூட்டும் தருணங்களும் இவருடைய கதைகளில் வெளிப்படுகின்றன. பாலியல் சார்ந்த சிக்கல்களையும் இக்கதைகள் தீவிரமாகக் கையாள்கின்றன.
0
out of 5