₹228.00
MRPGenre
Print Length
152 pages
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2022
ISBN
9789355230911
Weight
110 gram
தமிழகச் சூழலில் சாதியத்தின் சமூக இயக்கத்தையும் அது கொண்டாடும் சடங்குகள், பழக்கவழக்கங்கள், தீண்டாமை ஆகியவற்றையும் வட்டமிடுகிறது இந்நாவல், எண்பதுகளின் தொடக்கத்தில் தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர நேர்ந்த பின்னணியில் சாதிய அடுக்கில் நிகழும் ஆணவக் கொலைகளின் ஒரு கீற்றை மட்டும் எடுத்துக்கொண்டு அதைத் தன் போக்கில் உரசிப் பார்க்கிறார் கதைசொல்லி, புதிர்கள் மெல்லமெல்ல அவிழும் புலனாய்வொன்றைப் போல இந்நாவல் விரிகிறது.
தமிழகப் பண்பாட்டுச் சூழல் பற்றித் தமிழ்நாட்டைச் சாராதாரின் நினைவுகளும் கண்ணோட்டங்களும் நவீன இலக்கியங்களில் அவ்வப்போது பதிவு பெற்றிருக்கின்றன. ஆனால் சாதியத்தையும் ஆணவப் படுகொலையையும் முதன்மைப் பிரச்சினைகளாக்கி அயல் சூழலிலிருந்து உருவான புனைவு எனும் பிரிவில் இது முதலானது என்று சொல்லலாம்.
நாவலின் இன்னோர் இழை அஃறிணைகளின் வாழ்வினூடே பயணிக்கிறது. விலங்குகள், பறவைகள் பற்றிய அருந்தகவல்கள், அவற்றின் உடல், பிறப்பு, இறப்பு, இனச்சோக்கை என அவற்றின் வாழ்வு உயர்திணைக்கு உரித்தான அக்கறையுடன் புனையப்படுவது இந்நாவலின் தனிச்சிறப்பு.
0
out of 5