₹588.00
MRPGenre
Print Length
400 pages
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2023
ISBN
9788119034093
Weight
220 gram
தமிழின் முன்னோடிப் படைப்பாளர்களில் ஒருவரான நீல. பத்மநாபனின் ‘உறவுகள்' எல்லோருக்கும் நெருக்கமான கதையைக் கொண்ட நாவல். ஒவ்வொருவரின் உறவினர்களும் எப்படியிருக்கிறார்களோ, அவர்கள்தான் நாவலின் பாத்திரங்கள். எப்படியாவது வாழ்ந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள்; அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்கிற கேள்விகள் எழப் பார்க்கின்றன; அதற்கு அவசியமில்லை. உயிருக்குயிராய் மதிக்கின்ற தந்தை மரணப் படுக்கையில் இருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு மகன்; தந்தையின் மறுவாழ்வை விரும்பி நிற்கும் இவனது நினைவோட்டத்தில் இந்த உறவினர்கள் பெரும் புதிர்களாக வருகிறார்கள். இந்தப் பயணத்தை முன்னும் பின்னுமான நினைவலைகளாக வாசிக்கையில் நாமும் இந்த நாவலுக்குள் இருக்கிறோமோ என்று மனம் கலங்குகிறது.1975இல் வெளியான இந்த நாவல் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கழிந்த நிலையிலும் தன் புத்துணர்வைத் தக்கவைத்துக்கொண்டு இன்றைய வாசகருக்கான படைப்பாக மிளிர்கிறது.
0
out of 5