₹240.00
MRPGenre
Print Length
160 pages
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2014
ISBN
9789384641092
Weight
180 gram
எம்.வி.வி. தன் வாழ்க்கையின் சுமார் 20 ஆண்டுகால அனுபவத்தைக் ‘காதுகள்’ என்ற பெயரில் எழுதினார். இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன.
அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள்.
இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள்.
தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை.
பிரபஞ்சன்
0
out of 5