₹156.00
MRPGenre
Print Length
160 pages
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2013
ISBN
9789381969786
Weight
180 gram
“இதை வாசிக்கிறபோது எனது ஆச்சரியம் இரவிக்கு இந்தக் கலை அமைவு எப்படிக் கை வந்தது என்பதுதான். நெஞ்சையும் கவர்கிறது. சிந்தனையையும் தூண்டிவிடுகிறது. இந்த அனுபவங்கள் உயிர்த் துடிப்புள்ள வர்ணக் கீறுகளாக மிதந்து மிதந்து நிற்கின்றன. அந்த அப்பாவித்தனம் ஒருவேளை நம்மைச் சிரிக்க வைக்கிறது. இன்னொருவேளை நம்மை அழ வைக்கிறது. ஆனால் எல்லா வேளைகளிலும் நம்மைச் சிலிர்க்க வைக்கிறது.”
பேரா.கா. சிவத்தம்பி
‘காலம் ஆகிவந்த கதை’ முன்னுரையில்
“கதை நடத்திச் செலகையில் விவரிப்பில் வாசகனுக்குள் ஒரு நிரந்தர இருக்கையை உறுதிசெய்துவிடுகிற இரவி சிறந்த படைப்பாளிக்கான இருக்கையையும் உறுதிசெய்துகொள்கிறார்.”
பா. செயப்பிரகாசம்
‘வீடு நெடும்தூரம்’ முன்னுரையில்
“இரவியின் சுவடுகள் மென்மையானவை. வாழ்வின் ரம்மியங்களைத் துய்ப்பதற்கான வேட்கையிலிருந்து எழுபவைதான் அவரது கதைகள். ஆனால் அவரது இனிமையான வாழ்க்கையை அவரால் வாழமுடியாமல் போகிறது. அவரது வாழ்க்கை அவரது கைகளில் இல்லை. ஓட ஓடத் துரத்தப்படுகிறார். அவரைத் துரத்துவது இராணுவம் மட்டுமல்ல. நியாய உணர்வின் உறுத்தலினாலும் கடமை உணர்வின் பாரத்தினாலும் தலைதெறிக்க அவர் ஓடுகிறார். அந்த அவதியினால் உடல் நோகிறது. மனம் வெதும்புகிறது. அதனால் ஏற்பட்ட துயரப் பெருமூச்சின் வெம்மை அவரது கதைகள் எல்லாவற்றிலுமிருந்தும் கசிகிறது.”
எஸ். ரஞ்சகுமார்
‘பாலைகள் நூறு’ பதிப்புரையில்
0
out of 5