180.00

MRP ₹189 5% off
Shipping calculated at checkout.

Specifications

Genre

General

Print Length

120 pages

Language

Tamil

Publisher

Kalachuvadu Publications

Publication date

1 January 2023

ISBN

9788119034154

Weight

110 gram

Description

ஆட்சிப் பீடத்தின் முன் நிற்கும் இறந்தகாலம், நிகழ்காலம், வருங்காலங்களின் போராட்டம்தான் இந்நாடகம். வருங்காலத்தைக் கணக்கில் கொண்டு நிகழ்காலத்தின் சூட்சுமங்களைப் பயன்படுத்திக்கொள்கிறவர் வெற்றியாளனாகிறார்; ஔரங்கசீப் அத்தகைய வெற்றியாளர்!



இவ்வெற்றியை அவர் இரத்தக் களரியோடு பெற வேண்டியிருக்கிறது; உறவுகளைத் துண்டாடிச் சுயநலம் பேண வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு விநாடியிலும் தன் இருப்பைத் தானே சோதித்தறிய வேண்டியிருக்கிறது. உளவியல் சிக்கல்களோடு நடக்கும் இவ்வாழ்க்கை பின்னர் தானாகவே ஒரு நாடகமாகிவிடுவது ஓர் அதிசயம்தான்.



பல தோல்விகளால் ஆனதுதான் ஒரு வெற்றியா? அரச பீடங்களின் கால்களில் நசுங்கியபடியே சமூக மனசாட்சி போராடுவதை அப்படித்தான் பார்க்க வேண்டுமா? வெற்றியை ருசிக்கும்போது ஒருவர் எதிர்கொள்ளும் சமூகமும் இயற்கைப் போக்குகளும் அவருக்கு அளிக்கும் பரிசு எது? விடைகளை அறிய விழையும் நம்முடைய தேடல் நாடக அரங்கில் தொங்கும் எண்ணற்ற திரைகளினூடே கண்ணாமூச்சி ஆட்டம்போல முடிவின்றித் தொடர்கிறது.



வரலாற்று நிகழ்வுகளினூடே படைப்பூக்கம் மிகுந்த கற்பனையையும் உளவியல் பார்வையையும் செலுத்தி இந்திரா பார்த்தசாரதி அரங்கேற்றும் நாடகம், வரலாற்றின் சில திரைகளையேனும் விலக்கி, எழுதப்படாத வரலாற்று உண்மைகளை அல்லது உண்மைகளாக இருந்திருக்கக்கூடிய சாத்தியங்களை நமக்குக் காட்டுகிறது.


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%