₹354.00
MRPGenre
Print Length
456 pages
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2025
ISBN
9789361109119
Weight
220 gram
உடல் நலத்தையும் மனநலத்தையும் பேணிக்கொள்வதற்கு யோகாசனப் பயிற்சிகள் பெரிதும் துணைபுரிகின்றன. இப்பயிற்சிகளில் ஆழமான தேர்ச்சி பெற்றிருந்தவரும் அவற்றைப் பரவலாக மக்களிடம் சேர்ப்பதில் முன்னிலை வகித்தவர்களில் ஒருவருமான பி.கே.எஸ். ஐயங்கார் எழுதிய ‘ஆரோக்கிய யோகம்’ என்னும் நூலின் தமிழாக்கமே இந்நூல். இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் ஏற்படுத்தியிருக்கும் அழுத்தங்களால் உடலும் உள்ளமும் சோர்வுற்றிருப்பவர்களுக்கு இவ்வாசனப்பயிற்சிகள் அருமருந்தாய்த் திகழும் என்பது ஆசிரியரின் நம்பிக்கை. ஆசனப் பயிற்சிகளுக்கான ஆதாரப்பூர்வமான விளக்கங்களைக் கொண்டுள்ள இந்நூல் முக்கியமான யோகாசனங்கள் எவை, அவற்றை முறையாகப் பயிற்சி செய்வது எப்படி, பயிற்சியின்போது கவனிக்க வேண்டிய நுட்பங்கள் யாவை என்பனவற்றைப் பற்றி விரிவாகவும் துல்லியமாகவும் எடுத்துரைக்கிறது. உரிய படங்களுடனும் தெளிவான விளக்கங்களுடனும் எழுதப்பட்டிருக்கும் இப்புத்தகம் யோகாசனப் பயிற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு உற்ற துணையாக அமையும்.
0
out of 5