156.00

MRP ₹163.8 5% off
Shipping calculated at checkout.

Specifications

Genre

Fiction

Print Length

96 pages

Language

Tamil

Publisher

Kalachuvadu Publications

Publication date

1 January 2011

ISBN

9789380240466

Weight

110 gram

Description

துருக்கிய நகரமொன்றின் மது விடுதியில் ஓர் இரவு நடக்கும் சம்பவம் அஸீஸ் பேயைக் கவனத்துக்குரியவனாக்குகிறது. அந்தச் சம்பவம் மட்டும் நடந்திராவிட்டால் அவன் வெறும் தான்தோன்றி, மூர்க்கன், சுயநலக் காதலனாக மட்டுமே இருந்திருப்பான்.
எல்லாப் பெண்களும் தன்னால் காதலிக்கப்படுவதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என்று செருக்குடன் திரிந்த அஸீஸ் பேயை மரியத்தின் மேலுள்ள மாளாக் காதல் தடுமாறச் செய்கிறது. வேலையைத் துறக்கச் செய்கிறது. பெற்றோரை இழக்கச் செய்கிறது. இஸ்தான்புல்லிலிருந்து பெய்ரூட்வரை சாகசப் பயணம் செய்ய வைக்கிறது. இருந்தும் மரியம் அவனுடைய காதலை உதாசீனம் செய்கிறாள். அஸீஸ் பே அந்தக் காயத்தை மீறுவதற்காகப் போராடுகிறான். அதில் வாழ்வதற்காக மனிதன் மேற்கொள்ளும் எல்லா நற்செயல்களும் கபடங்களும் இருக்கின்றன. அவற்றிலிருந்து அஸீஸ் பே கற்றுக்கொள்ளும் பாடம்: தான் ஒரு கலைஞன், கலைஞன் மட்டுமே. இந்த உணர்வுதான் மது விடுதிச் சம்பவத்துக்கு அவனை இட்டுச்செல்கிறது.
சொல்லப்படும் கதையின் பொருளைச் சார்ந்தல்ல, சொல்லும் முறையைச் சார்ந்தே இலக்கியம் சமகாலத்தன்மை பெறுகிறது என்பதற்கான நவீன துருக்கி இலக்கிய உதாரணங்களில் ஒன்று இந்த நெடுங்கதை.
அய்ஃபர் டுன்ஷின் படைப்பு இந்திய மொழிகளில் முதன்முதலாகத் தமிழில் வெளியாகிறது.


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%