₹120.00
MRPGenre
Print Length
88 pages
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2022
ISBN
9788195978168
Weight
110 gram
எதைப் பற்றி எழுதினாலும் அலாதியான பார்வையுடனும் அடியோட்டமான அங்கதத்துடனும் எழுதியவர் அசோகமித்திரன். அந்தக் காலத்தின் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினருடன் பிரிக்க முடியாமல் பிணைந்திருந்த கிரிக்கெட், அசோகமித்திரனையும் விட்டுவைக்கவில்லை. உள்ளூர் கிரிக்கெட் குழுவின் தலைவராகவும் உலக கிரிக்கெட்டின் தீவிரமான பார்வையாளராகவும் இருந்த அசோகமித்திரன் தான் ஆடிய ஆட்டங்களையும் அவதானித்த ஆட்டங்களையும் பற்றித் தொடராக எழுதியிருக்கிறார்.
கிரிக்கெட்டின் அழகியலைக் காட்டிலும் அதன் உளவியலுக்கும் ஆட்டத்தின் புதிர்களுக்கும் அழுத்தம் தரும் அசோகமித்திரனின் எழுத்து கிரிக்கெட்டை மாறுபட்ட கோணத்தில் பார்க்க உதவுகிறது. இந்தக் கட்டுரைகள் முதல்முறையாகத் தற்போது நூல் வடிவம் பெறுகின்றன.
0
out of 5