₹360.00
MRPGenre
Print Length
248 pages
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2023
ISBN
9788119034338
Weight
180 gram
அறவி என்றால் துறவி. துறவுத்தன்மையை யதார்த்த வாழ்வியலுக்குள் பொருத்திப் பார்த்தால் துறவின் அர்த்தம் புதிதாய் விளங்கும். நிதர்சனங்களின் முகங்களுக்குள் துறவுத்தன்மையைப் பொருத்திப் பார்க்க விழைகிறது இந்த நாவல்.கடந்த நூற்றாண்டில் பெண்கள்மீது திணிக்கப்பட்ட பாலியல் வறட்சி பல பெண்களைத் துறவறத்தின் பக்கம் வலிந்து தள்ளியிருக்கிறது. அதைப் பெண்ணின் தனிப்பட்ட விருப்பமாக மாற்றும் யதார்த்தங்களும் அரங்கேறின. இன்றைய பெண் தன்மீது திணிக்கப்பட்ட சடங்குகளைத் தாண்டி வாழ்வியலை அதன் நுட்பத்துடன் அணுகக் கற்றுத்தந்திருக்கிறது.
சென்ற நூற்றாண்டின் தொடக்க காலத்துப் பெண்ணையும் அதன் பிற்காலத்துப் பெண்களையும் இந்த நூற்றாண்டின் பெண்களையும் பற்றி இந்தப் புதினம் பேசுகிறது. அந்தந்தக் காலகட்டத்துப் பெண்களின் இணைத்தன்மையையும் முரண்களையும் இப்புதினம் கையாள்கிறது. வெவ்வேறு நாடுகள், நகரங்கள், கலாசாரங்கள், கடிதங்கள் என்றவாறு செல்லும் இந்தக் கதை பெண்கள் எவ்வாறு அவற்றின் பொருட்டு உருமாற்றம் பெறுகிறார்கள் என்பதையும் உணர்த்த முயல்கிறது.
0
out of 5